News Details
January 17, 2025
புதுமுக நடிகர் தேவ் நடிக்கும் ‘ யோலோ ‘
Published on: January 17, 2025
- அறிமுக நடிகர் தேவ் கதையின் நாயகனாக நடிக்கும் ‘ யோலோ ‘ எனும் திரைப்படம் அழகான காதல் படைப்பாக தயாராகிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
- அறிமுக இயக்குநர் எஸ். சாம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ யோலோ ‘ எனும் திரைப்படத்தில் தேவ் , தேவிகா, படவா கோபி, பிரவீண், சுவாதி, ஆகாஷ் , திவாகர் , யுவராஜ் , சுபாஷிணி கண்ணன், வி ஜே நிக்கி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு சகிஷ்னா சேவியர் இசையமைத்து வருகிறார்.
- ரொமான்டிக் காமெடி ஜேனரிலான இந்த திரைப்படத்தை எம் ஆர் மோஷன் பிக்சர்ஸ் தயாரிகிறது.
- படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில் , ” இன்றைய இணைய தலைமுறையினரின் வாழ்வியலை பதிவு செய்யும் படமாக உருவாகி வருகிறது. இரண்டு பேர் வாழ முடியாத வாழ்க்கையை.. வேறு இரண்டு பேர் வாழ்வார்கள்.
- அது எப்படி? என்பதை தான் இந்த படத்தின் திரைக்கதையாக அமைக்கப்பட்டிருக்கிறது. வாழ்க்கை ஒருமுறைதான். அதனை அனுபவித்து நன்றாக வாழுங்கள் என்பதை கமர்சியல் அம்சங்களுடன் விவரித்திருக்கிறோம் ”என்றார் .
- இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments : 0
No active comments available.
Leave a Reply
Your Email address will not be published.